Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.58,100 வரை சம்பளம்.. சமையல் செய்ய தெரியுமா? கோவையில் சூப்பரான வேலை.. தேதி முடியப்போகுது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ள நிலையில் விண்ணப்பம் செய்வதற்கான தேதி முடியப்போகிறது.

தமிழ்நாட்டில் சுகாதாரத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும், மாவட்ட வாரியாகவும் தனித்தனியே பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 Coimbatore District Medical and Rural Welfare office recruitment for cook

அந்த வகையில் கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: கோவை பந்தய சாலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 10 சமையலர் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மாதசம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.15,700 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.58,100 வரை வழங்கப்பட உள்ளது. கல்வி தகுதியை பொறுத்தமட்டில் விண்ணப்பம் செய்வோருக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 28 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் 0422 - 2220364 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக கோவை பந்தய சாலையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தை சென்று விபரங்ளை கேட்டறிந்து விண்ணப்பம் செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+