மாதம் ரூ.16,800 டூ ரூ.1 லட்சம் வரை சம்பளம்.. இசிஎச்எஸ்-ல் சூப்பர் வேலை.. தமிழகத்திலேயே பணி
கோவை: முன்னாள் படை வீரர்களுக்கான சுகாதார திட்டத்தில் கோவை டிவிஷனுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, டாக்டர் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.16,500 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் முன்னாள் ராணுவத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் இசிஎச்எஸ் (ECHS) எனும் முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பு சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கோவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: ஆபிஸ் இன்சார்ஜ் பணிக்கு 2 பேர், மகப்பேறு டாக்டர் (Gyanacologist), ரேடியோலாஜிஸ்ட், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், நர்சிங் அசிஸ்டென்ட், லேப் டெக்னீசியன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கிளர்க், பெண் உதவியாளர் பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சாபாய்வாலா, சவுக்கிதார் பணிகளுக்கு தலா 2 பேர் டென்டல் ஆபிசர் (Dental Officer) பணிக்கு 3 பேர் என மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: ஆபிசர் இன்சார்ஜ் பணிக்கு ஓய்வு பெற்ற ராணுவத்தினராக இருக்க வேண்டும். மகப்பேறு டாக்டர் பணிக்கு 5 ஆண்டு அனுபவத்துடன் எம்டி, எம்எஸ் மற்றும் டிஎன்பி படிப்புகளை முடித்திருக்க வேண்டும். ரேடியோலாஜிஸ்ட் பணிக்கு 3 குறிப்பிட்ட துறையில் மாஸ்டர் டிகிரி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு எம்டி/எம்எஸ் முடித்து 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மெடிக்கல் ஆபிசர் பணிக்கு எம்பிபிஎஸ் முடித்து 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பிசியோதெரபிஸ்ட் பணிக்கு டிப்ளமோ பிசியோதெரபிஸ்ட் படிப்பு, ரேடியோகிராபர் பணிக்கு டிப்ளமோ ரோடியோகிராபி, நர்சிங் அசிஸ்டென்ட் பணக்கு டிப்ளமோ ஜிஎன்எம், லேப் டெக்னீசியன் பணிக்கு பிஎஸ்சி எம்எல்டி அல்லது டிஎம்எல்டி படிப்பு முடித்திருக்க வேண்டும்.
டென்டல் ஆபிசர் பணிக்கு பிடிஎஸ், டேட்டா என்ட்ரி ஆபிசர், கிளர்க் பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். சவுக்கிதார் பணிக்கு 8 ம் வகுப்பு, பெண் உதவியாளர், சாபாய்வாலா பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் தங்களது பணியில் 3 ஆண்டு முதல் அதிகபட்சமாக 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: மகப்பேறு டாக்டர், ரேடியோலாஜிஸ்ட், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கு தலா ரூ.1 லட்சம், ஆபிசர் இன்சார்ஜ், மெடிக்கல் ஆபிசர், டென்டல் ஆபிசர் பணிகளுக்கு மாதம் ரூ.75 ஆயிரம், பிசியோதெரபிஸ்ட், ரோடியோகிராபர், நர்சிங் அசிஸஅடென்ட், லேப் டெக்னீசியன் பணிகளுக்கு தலா ரூ.28,100 வழங்கப்படும். கிளர்க் பணிக்கு மாதம் ரூ.19,700, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சவுக்கிதார், பெண் உதவியாளர், சபாய்வாலா பணிகளுக்கு மாதம் தலா ரூ.16,800 வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 68 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அதிகபட்சமாக ஓராண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.echs.gov.in இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு கல்வி சான்ழிதழ்களின் நகல்களோடு பிப்ரவரி 16ம் தேதிக்குள் கிடைக்கும்படி கீழே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நேர்க்காணல் எப்போது: இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இ-மெயிலில் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்க்காணல் என்பது பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 23ம் தேதி ஆபிசர் சார்ஜ், மகப்பேறு டாக்டர், ரேடியோலாஜிஸ்ட், மெடிக்கல் ஆபிசர், பிசியோதெரபிஸ்ட், ரேடியோகிராபர், நர்சிங் அசிஸஅடென்ட், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு பிப்ரவரி 23ம் தேதி நேர்க்காணல் நடக்கும். பிற பணிகளை விரும்புவோர் பிப்ரவரி 24ம் தேதி நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
இன்டர்வியூ இடம்: நேர்க்காணல் என்பது ECHS Cell, Station Headquartes, Redfields, Coimbatore - 641 018 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. நேர்க்காணலில் பங்கேற்போர் காலை 8.30 மணிக்குள் உரிய சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டில் பணியமர்த்தப்பவார்கள். சந்தேகங்கள் இருப்பின் 0422 - 2312281, 7418254637 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தீர்த்து கொள்ளலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications