நாளை இன்டர்வியூ.. எழுத்து தேர்வு இல்லை.. கோவை விவசாய பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு!
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் எழுத்து தேர்வின்றி நேர்க்காணல் முறையில் 3 பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. எழுத்து தேர்வு இல்லாத இந்த பணிகளுக்கு நாளை நேர்க்காணல் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.56 ஆயிரம் வரை கிடைக்கும்.
கோவையில் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University or TNAU) அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட்ஸ் சயின்டிஸ்ட் - I, ப்ராஜெக்ட்ஸ் அசோசியேட்ஸ் - I, டெக்னீக்கல் அசிஸ்டென்ட் - I ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதில் ப்ராஜெக்ட்ஸ் சயின்டிஸ்ட் - I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பயோ இன்பமேட்டிக்ஸ்/பயோ டெக்னாலஜி படிப்பில் பிஎச்டி முடித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட்ஸ் அசோசியேட்ஸ் - I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பயோ இன்பர்மேட்டிக்ஸ், பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளில் மாஸ்டர் டிகிரியையும், டெக்னீக்கல் அசிஸ்டென்ட் - I பணிக்கு டிப்ளமோ அக்ரிகல்சர் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
ப்ராஜெக்ட்ஸ் சயின்டிஸ்ட் - I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். ப்ராஜெக்ட்ஸ் அசோசியேட்ஸ் - I பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். டெக்னீக்கல் அசிஸ்டென்ட் - I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ரூ.18 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுயவிபரங்களும், சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். 7ம் தேதியான நாளை (வெள்ளிக்கிழமை) ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் - I, ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் - I பணிக்கான நேர்க்காணல் என்பது The Director (Centre for Plant Molecular Biology & Biotechnology) TNAU, Coimbatore என்ற இடத்தில் நேர்க்காணல் நடக்கிறது.
அதேபோல் வரும் 11ம் தேதியில் டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கான நேர்க்காணல் The Director, Tamil Nadu Rice Research Institute, Aduthurai என் இடத்திலும் நடைபெற உள்ளது. நேர்க்காணலில் பங்கேற்க செல்வோர் அன்றைய தினம் 9 மணிக்கு முன்பாகவே செல்ல வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி ப்ராஜெக்ட்ஸ் சயின்டிஸ்ட்-I, டெக்னீக்கல் அசிஸ்டென்ட் - I பணிக்கு தலா 2 பேர், ப்ராஜெக்ட்ஸ் அசோசியேட்ஸ் - I பணிக்கு ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications