கோவையில் ஐடி வேலை.. அழைக்கும் WIPRO நிறுவனம்.. விண்ணப்பிக்க சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் விப்ரோ நிறுவனத்தின் டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோவும் (Wipro) ஒன்று. இந்நிலையில் தான் கோவையில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

it jobs job jobs career careers wipro coimbatore covai

தற்போதைய அறிவிப்பின்படி கோவை விப்ரோவில் டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வி தகுதி உள்ளிட்ட முக்கிய விபரங்கள் வருமாறு:

விப்ரோ டிரெய்னி பணிக்கு இளங்கலை பட்டப்படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ அல்லது அதற்கு நிகரான அனலிட்டிக்கல் ஏரியாவில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எம்சிஏ படிப்பு படித்தவர்களும் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் என்ட்ரி லெவல் எஸ்சிஎஸ் (SCS) பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் எஸ்டிஎல்சி (SDLC or Software Development Life Cycle) கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங், சிஸ்டம்ஸ் டெஸ்ட்டிங் மற்றுமு் சாப்ட்வேர் குவாலிட்டி பற்றிய மெத்தடாலஜிஸ் தெரிந்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் கான்செப்ட்ஸ் Table Relationships, keys, SQL, DB2 மற்றும் சிஸ்டம்ஸ் இம்ளிமென்டேஷன், தெரிந்திருக்க வேண்டும்.

டேட்டா அனலிசிஸ் பணியும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஆங்கிலத்தில் நன்கு எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாதசம்பளம் என்பது நிர்யணம் செய்யப்பட உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+