அனுபவம் வேண்டாம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சென்னையில் நாளை இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (அக்டோபர் 5) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது.

நம் நாட்டில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்களில் ஒன்று CompIndia Infotech Pvt Ltd's. இந்த நிறுவனம் சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறையில் கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் 500க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் CompIndia Infotech Pvt Ltd நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்னையில் செயல்பட்டு வரும் CompIndia Infotech நிறுவனத்தில் தற்போது QA Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிடெக் பிரிவில் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பிஇ, எம்சிஏ படித்தவர்களும், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை 2022, 2023, 2024ம் ஆண்டுகளில் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

இது Freshers-க்களுக்கான வேலைவாய்ப்பாகும். இதனால் பணி அனுபவம் என்பது தேவையில்லை. இருப்பினும் கூட இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அந்த வகையில் ஸ்ட்ராங் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன், நல்ல கம்யூனிகேஷன் திறமை, புதிய டெக்னாலஜிகளை கற்கும் ஆர்வம் இருக்க வேண்டும்.

மேலும் Manual மற்றும் Automation Testing சார்ந்த கோர்ஸ் முடித்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி இண்டர்வியூ முடிவில் தெரிவிக்கப்படும்.தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உரிய கல்வி சான்றுகளுடன் நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்கலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் (91) 7904710175 (ஷாலினி பிரியா) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.

பணிக்கான இண்டர்வியூ என்பது அக்டோபர் 5ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது CompIndia Infotech Pvt LTd, No: 51, 6th floor, 3rd wing, Nelson Towers, Nelson Mancikam Road, Aminjikarai, Chennai - 600029 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Written Test (Aptitude) முறையில் இருக்கும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+