Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கான்ஸ்டபிள் வேலை.. 819 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. மாதம் 69,000 சம்பளம்! விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் 819 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு படை பிரிவாகும். தன்னாட்சி பிராந்தியமான திபெத் எல்லைப் பகுதியில் இந்த படைதான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. 1962 - ஆம் ஆண்டு இந்த பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.

job indian overseas bank bank jobs

இந்தோ திபெத் பாதுகாப்பு படை பிரிவில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 819 - கான்ஸ்டபிள் (kitchen services) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
ஆண்கள் - 697
பெண்கள் - 122
என மொத்தம் 819 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித்தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் உணவு தயாரிப்பு அல்லது சமையலறை படிப்பு (food production or kitchen course) முடித்து இருப்பது அவசியம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையை பொறுத்தவரை உடல் திறன் சோதனை (PET), உடல் தகுதி தேர்வு (PST), எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் எவ்வளவு?: தற்காலிக அடிப்படையில் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளது. பணி நிரந்தரத்திற்கு பிறகு சம்பளமாக ரூ.27,700 - 69,100-வரை சம்பளமாக வழங்கப்படும். காலிப்பணியிடங்கள் குறித்த எண்ணிக்கை தற்காலிகமானது. காலிப்பணியிடங்கள் கூட்டவோ.. குறைக்கவோ படலாம்..

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேர்வர்கள் ஒருமுறைக்கு இருமுறை படித்து முழு விவரங்களையும் செக் செய்து கொள்ளவும். விண்ணப்பிக்க அவகாசம் நாளை (செப்.2) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 1 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு அறிவிபினை படிக்க https://cbcindia.gov.in/cbc/public/uploads/client-request/English-19143-11-0018-2425-66bef6237d111-1723790883-creatives.pdf
தேர்வுக்க்கு விண்ணப்பிக்க - https://recruitment.itbpolice.nic.in/rect/index.php

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+