10ம் வகுப்பு போதும்! கைநிறைய சம்பளம்! அழைக்கும் மத்திய அரசின் கார்டைட் ஆலை.. நீலகிரியில் தான் வேலை
நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசின் கார்டைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ஆயுத தொழிற்சாலையின் கீழ் இந்தியாவில் கார்டைட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் கார்டைட் தொழிற்சாலை உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான வெடிமருந்துகள் மற்றும் கார்டைட் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
ரசாயன செயல்முறைக்கான பணியாளர் (Chemical Process Worker) என்ற அடிப்படையில் தான் இந்த 150 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
இதுதொடர்பாக வெளியாகி உள்ள பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கூறப்பட்டுள்ள முக்கிய விபரங்கள் வருமாறு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் என்சிவிடி சார்பில் வழங்கிய என்ஏசி/என்டிசி சான்று பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. வயது என்பது 2023 ஜூன் மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். மேலும் டிஏவும் வழங்கப்படும். இருப்பினும் இது ஒரு தற்காலிக பணியாகும். முதலில் ஒரு ஆண்டும், தேவையென்றால் பணி நீட்டிப்பும் வழங்கப்படலாம். விண்ணப்பம் செய்வோர் என்சிவிடி மதிப்பெண், டிரேட் தேர்வு( Trade Test)/ செய்முறை தேர்வு (Practical test) மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://cordite.co.in/சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District, Tamil Nadu PIn - 643 202 என்ற முகவரிக்கு வரும் 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய Click Here
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications