"வீட்டில் இருந்தே வேலை".. அலுவலகம் செல்லாமல் ரூ.6 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. அழைக்கும் ஐடி நிறுவனம்
சென்னை: அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றும் வகையில் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஐடிநிறுவனத்தின் பெயர் சிஆர்எம் (CRM). இந்த நிறுவனம் Saas கம்பெனியாகும். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அயர்லாந்து, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் தற்போது Product Management Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது விண்ணப்பம் செய்வோர் 2024, 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் டெஸ்ட் (MCQ), அசைன்மென்ட்ஸ் மற்றும் ஆன்லைன் இண்டர்வியூ என்பது நடக்கும். இதில் தேர்வாகும் நபர்களுக்கு 6 மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகு பணியில் ஊழியர்களாக சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் 6 மாதம் பயிற்சி காலமாகும். இந்த சமயத்தில் வாரத்துக்கு 42.5 மணிநேரம் வரை பணி என்பது இருக்கும். பயிற்சி காலத்தில் Stipend ஆக மாதம் ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்படும். 6 மாத பயிற்சியை முடிப்பவர்களுக்கு திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். அதன்படி ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும்.
இது ஒரு Work From Home பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் அனைவரும் அலுவலகம் செல்ல வேண்டாம். வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். இண்டர்வியூ அனைத்தும் ஆன்லைனில் தான் இருக்கும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது அறிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு முடியலாம். இதனால் இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications