Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் ஆக விருப்பமா? ரூ.69,100 வரை மாதசம்பளம்.. சிஆர்பிஎப்-யில் கான்ஸ்டபிள் வேலை.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் சிஆர்பிஎப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்பட உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான போலீஸ் படை பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force or CRPF).

CRPF recruitment 2024 of Meritorious sports persons for the post of 169 Constable

இந்நிலையில் தான் சிஆர்பிஎப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடம் - கல்வி தகுதி: சிஆர்பிஎப் எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள 169 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருவரும் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் கண்டிப்பாக மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் Sport Quoto பணியிடம் என்றால் விண்ணப்பம் செய்வோர் கீழே அதிகாரப்பூர்வ இணைப்பில் கூறப்பட்டுள்ள விளையாட்டுகளில் பங்கேற்று இருப்பவராக கட்டாயம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 23 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 15.04.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது.

மாதசம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.21,700 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் மத்திய அரசு பணியாளர்களுக்கான பிற அலோவன்ஸ் வழங்கப்படும். பென்ஷனும் உண்டு என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் rect.crpf.gov.in இணையதளம் மூலம் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் என்பது கிடையாது. விண்ணப்பம் செய்வோர் Physical Standard Test, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+