12 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. மாதம் 81 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு ஊழியராக செம சான்ஸ்
சென்னை: மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் CSIR-CRRI - இல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். ஜூனியர் ஸ்டெனோகிராஃபர், ஜூனியர் செக்ரட்டரியேட் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் - மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CRRI) காலியாக உள்ள 209 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் என்பதால், தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கான அனைத்து சலுகை, சம்பள உயர்வு கிடைக்கும். காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* ஜூனியர் செக்ரட்டரியேட் உதவியாளர் (ஜெனரல்/எஃப்&ஏ/எஸ்&பி) - 177* ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் - 32
கல்வித் தகுதி:
* ஜூனியர் செகரேட்டரியேட் பணியிடத்திற்கு 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரானவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிணியில் வேகமாக டைப் செய்ய தெரிந்து இருப்பது அவசியம்.
* ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் தெரிந்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு:
* ஜூனியர் செகரேட்டரியட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
* ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
அரசாங்க விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு:
* ஜூனியர் செகரேட்டரியேட்: ரூ 19,900 - ரூ.63,200-
* ஸ்டெனோகிராபர்: ரூ.25,500 - ரூ.81,100-வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 21.04.2025 கடைசி நாளாகும். எழுத்து தேர்வு மே / ஜூன் மாதங்களில் நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://crridom.gov.in/sites/default/files/vacancy/JSA-JST-ADVT-2025.pdf
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications