ரூ.1.12 லட்சம் சம்பளம்.. சிஎஸ்ஐஆர்-ஐஐபி-யில் சூப்பர் வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
சென்னை: மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் -ஐஐபி நிறுவனத்தில் மாதம் மாதம் ரூ.19,900 முதல் ரூ.1.12 லட்சம் வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள டெக்னீக்கல் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய நாளை (நவம்பர் 9) கடைசி நாளாகும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிஎஸ்ஐஆர்-ஐஐபி (Council of Scientific and Industrial Research - Indian Institute of Petrolium) உத்தர காண்ட் மாநிலம் டேராடூனில் செயல்பட்டு வருகிறது.

இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: சிஐஎஸ்ஆர்-ஐஐபி-யில் தற்போது டெக்னீக்கல் அசிஸ்டென்ட் மற்றும் டெக்னீசியன் ஆகிய 2 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பபப்ட உள்ளது. பணி வாரியாக பார்த்தால் டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 25 பேர், டெக்னீசியன் பணிக்கு 26 பேர் என மொத்தம் 51 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: டெக்னீசிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், சிவில், கெமிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்களும், பிஎஸ்சி பிரிவில் கெமிக்கல் சயின்ஸ்ட், பயோ டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, சயின்ஸ் கம்யூனிகேசன், முதுகலை படிப்பில் ஜார்னலிசம், மாஸ் கம்யூனிகேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
டெக்னீசியன் பணிக்கு ஐடிஐ-யில் கெமிக்கல் பிளண்ட் பிரிவில் அட்டென்டென்ட் ஆபரேட்டர், லேபாரட்டரி அசிஸ்டென்ட், ட்டனர், கிளாஸ் ப்ளோவர் டிரேட் பிளம்பிங், கார்பென்டரி, ரெப்ரிஜிரேஷன் அன்ட் ஏர் கண்டிஷனிங், வெல்டர், சிவில் என்ஜினீயரிங் (மேசன்), பிட்டர், டீசல் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், லைப்ரேரி அசிஸ்டென்ட் டிரேட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பாய்லர் அட்டென்டென்ட் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மாதசம்பளம்: டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும். டெக்னீசியன் (1) பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 9 ம் தேதி (நாளை) மாலை 5.30 மணிக்குள் https://www.iip.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்கள், முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஒருவர் 2 பொறுப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். ஆனால் கூடுதலாக விண்ணப்பம் செய்தால் அதற்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வயது, கல்வி தகுதி, அனுபவம் தொடர்பான சான்றிதழ்களின் நகல்களை வைத்து Self Attested செய்து ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் Sr.Controller of Administration, CSIR-Indian Institute of Petroleum, P.O.1.I.P., Mokhampur, Haridwar Road, Dehradun - 248005 (Uttarakhand) எ்னற முகவரிக்கு நவம்பர் 19 ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும், ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும் Click Here
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications