டிகிரி போதும்.. ரூ.44,900 டூ ரூ.1.51 லட்சம் வரை சம்பளம்! அழைக்கும் சிஎஸ்ஐஆர்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சிஐஎஸ்ஆர்-யில் காலியாக உள்ள 444 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் குறைந்தபட்சமாக ரூ.44,900 முதல் ரூ.1.51 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சிஐஎஸ்ஆர் (CSIR - Council of Scientific and Industrial Research) எனும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இது ஒரு Autonomous அமைப்பாகும்.

இந்த கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: சிஐஎஸ்ஆரில் மொத்தம் 2 பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி செக்சன் ஆபிசர் (Section Officer) பணிக்கு 76 பேர், அதேபோல் அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு 368 பேர் என மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி - மாத சம்பளம்: செக்சன் ஆபிசர் பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.47,600 வழங்கப்படும். அதன்பிறகு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரை வழங்கப்படும். அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.csir.res.in என்ற இணையதளம் மூலம் ஜனவரி மாதம் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவர்கள் எழுத்து தேர்வு, நேர்க்காணல் மற்றும் கம்யூட்டர் ப்ரோபிசியென்சி டெஸ்ட் உள்ளிட்டவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, பெண்கள், சிஎஸ்ஐஆர், முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிக்குள் 07969049955 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
பணிக்கு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications