மத்திய அரசு வேலை.. ரூ.1.51 லட்சம் வரை சம்பளம்.. டிகிரி போதும்.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான CSIR ல் காலியாக உள்ள 444 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அறிவியல் & தொழில் ஆய்வு நிறுவனம் (CSIR) காலியாக உள்ள அஸ்சிஸ்டண்ட் செக்ஷன் ஆபிசர் மற்றும் செக்ஷன் ஆபிசர் பணியிடஙக்ளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
உதவி செக்ஷன் ஆபிசர் - 76 பணியிடங்கள்.
செக்ஷன் ஆபிசர் - 368 பணியிடங்கள்.
மொத்தம் 444 பணியிடங்கள்.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை இரு பணியிடங்களுக்குமே அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: அஸ்சிஸ்டண்ட் செக்ஷன் ஆபிசர் பணிக்கு ரூ. 47,600 - ரூ.1,51,100 - வரை சம்பளமாக கிடைக்கும். செக்ஷன் ஆபிசர் பணிக்கு ரூ. 44, 900 - ரூ.1,42,400 - வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, சிபிடி எனப்படும் கணினி தேர்வு ஆகியவை மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் நடைபெறும். திருவனந்தபுரம், பெங்களூர், ஐதராபாத், புதுடெல்லி, டேராடூன், அகமதாபாத், லக்னோ, தன்பத், கவுகாத்தி, ஜாம்ஷெட்பூர், நாக்பூர், ஜெய்பூர், புனே ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12. 01. 2024 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பை படிக்க இங்கே . https://www.csir.res.in/sites/default/files/2023-12/Detail%20%20Advt.%20-%2008.12.2023.pdf கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications