நோ எக்ஸாம்.. கைநிறைய சம்பளம்.. ஆவின் பொருட்கள் விற்பனை பிரிவுக்கு ஆட்சேர்ப்பு! கடலூரில் தான் வேலை!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள ஆவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனைக்கான விற்பனை செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் இந்த பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆவின் பால் மற்றும் அதனை சார்ந்த உபபொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரிவில் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

Cuddalore District Cooperative Milk Producers Union recruitment for the sales of Aavin products

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்னம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூர், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்வதற்கான விற்பனை செயலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிபிஏ அல்லது எம்பிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆண், பெண் என இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் விண்ணப்பத்தாரர்கள் 35 வயதுக்குள் இருப்பதோடு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மொழிகளில் எழுதம், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு சொந்தமான இருசக்கர வாகனம், செல்போன் வைத்திருக்க வேண்டும். களப்பணியில் முன்னபவமும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு எழுத்து தேர்வு என்பது கிடையாது. நேர்க்காணல் முறையில் தான் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Cuddalore District Cooperative Milk Producers Union recruitment for the sales of Aavin products

இதற்கான நேர்க்காணல் என்பது வரும் 12ம் தேதி காலை 11 மணிக்கு கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிமிடெட்டின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சுயவிபரம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்று கொள்ளலாம். இந்த பணி முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலானது.

இவ்வாறு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் மாதம் ரூ.7,500 சம்பளமாக வழங்கப்படும். அதன்பிறகு 2வது மாதம் முதல் ரூ.15,000 சம்பளமாகவும், அதோடு பயணப்படியாக ரூ.1000-மும் வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி 5 பேர் படம்டடும் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் சந்தேகங்கள் இருப்பின் 90874 36660, 98942 41477, 97514 38063, 04144 - 294773 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+