சுங்க அலுவலகத்தில் வேலை.. சென்னையிலேயே பணியிடம்! 69 ஆயிரம் சம்பளம்! அப்ளை பண்ண ரெடியா
சென்னை: சுங்க அலுவலத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 69 ஆயிரம் வரை வழங்கப்படும். சென்னையிலேயே பணி நியமனம் செய்யப்படுவார்கள். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கஸ்டம்ஸ் எனப்படும் சுங்கத்துறை மத்திய வருவாய் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள், துறைமுகங்களில் சுங்கவரி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது சுங்க அலுவலர்களின் முக்கியமான பணியாகும்.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. அந்த வகையில் சென்னையிலும் சுங்க அலுவலகங்கள் உள்ளன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
சமையலர் (Halwai) - 02:
இதற்கான கல்வி தகுதியைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது கேட்டரிங் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். உதவி சமையலர் பணிக்கு ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு:
* 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 31.12.2025 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.
சம்பளம் எவ்வளவு
* சம்பளத்தைப் பொறுத்தவரை ரூ.21,700 - 69,100 வரை வழங்கப்படும்.
* உதவி சமையலர் பணிக்கு ரூ.19,900 - 63,200 வரை சம்பளமாக அளிக்கப்படும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் திறன் தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கான சான்றிதழ், வயதுக்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS (ESTABLISHMENT)
OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS (GENERAL)
CUSTOM HOUSE, NO. 60, RAJAJI SALAI,
CHENNAI - 600 001
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://chennaicustoms.gov.in/wp-content/uploads/2025/11/NOTIFICATION-1.pdf
விண்ணப்பப் படிவத்தை பார்க்க:
https://chennaicustoms.gov.in/wp-content/uploads/2025/11/APPLICATION.pdf












Click it and Unblock the Notifications