இ-மெயில் அனுப்ப தெரிந்தாலே போதும்.. Deloitte ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. ரெடியா?
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெலாய்ட் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய முழு விவரங்கள் போதும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் Deloitte சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தற்போது Analyst - Learning Operations பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்பிஏ, பட்ட மேற்படிப்பு படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு 0- 5 ஆண்டு வரை Learning / Backend Operations பணியில் அனுபவம் இருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-மெயில் அனுப்ப தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் எக்ஸல் மற்றும் Sorting, Removing Duplicates, filtering உள்ளிட்ட எக்ஸல் Features தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டீமாக சேர்ந்து பணியாற்றவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
எம்எஸ் பவர் பாயிண்ட் பிரசென்டேஷன் தெரிந்திருப்பது, Zoom, Saba Meeting/Centra, Ms teams உள்ளிட்ட Virtual Platforms உள்ளிட்டவற்றை பயன்படுத்திய அனுபவம் இருந்தால் பிளஸ் பாயிண்டாகும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள டெலாய்ட் நிறுவனத்தில் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். ஷிப்ட் டைமிங் என்பது மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். ஏனென்றால் பணிக்கான அறிவிப்பு வந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் என்பதால் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications