அனுபவம் தேவையில்லை.. Deloitte ஐடி நிறுவனத்தில் வேலை ரெடியா இருக்கு.. சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெலாய்ட் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
டெலாய்ட் நிறுவனத்தில் தற்போது Azure /AWS DevOPs Engineer - Analyst - பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை.

இந்த பணிக்கு இளநிலை அல்லது முதுநிலை படிப்புகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். 0- 1 ஆண்டு புரோபஷனல் அனுபவம் இருக்க வேண்டும். இருப்பினும் பணி அனுபவம் இல்லாதவர்களுக்கு அதிகமாக வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். டெக்னிக்கல் ஸ்கில்ஸாக கிளவுட் கம்ப்யூட்டிங் கான்செப்ட்ஸ் (சர்வர், ஸ்டோரேஜ் நெட்வொர்க்கிங் உள்பட பல தெரிந்திருக்க வேண்டும்.), அதேபோல் Azure அல்லது AWS கற்க ஆர்வமிருக்க வேண்டும். அதேபோல் கிளவுட் கான்சொல்ஸ் எக்ஸ்புளோர் செய்ய வில்லிங்னஸ்ஸாக இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் செக்லிஸ்ட், கேள்விகள் கேட்பது உள்ளிட்ட திறமை இருக்க வேண்டும். செக்யூரிட்டி ஆடிட்டிங் பாலிசி மற்றும் கிரிட்டிக்கல் அத்தாரிசேஷன் மற்றும் ஆப்ஜெக்ட்ஸ் உள்ளிட்டவை பற்றிய அறிவு இருக்க வேண்டும். அதேபோல் அனலிட்டிக்கில் ஸ்கில்ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் ,மல்டி டாஸ்க்கிங் ஸ்கில்ஸ் உள்ளிட்ளிட்டவை இருக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களை கற்க தயாராக இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் தனியாகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். பணி என்பது 24/7 என்ற அடிப்படையில் இருக்கும். இதனால் ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றியும் எதுவும் கூறப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications