தனலட்சுமி வங்கியில் வேலை.. டிகிரி முடிச்சிருந்தாலே போதும்.. செம சான்ஸ்.. அப்ளை பண்ண ரெடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனலட்சுமி வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் ஆபிசர், சீனியர் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

நாட்டின் மிகப்பழமையான தனியார் வங்கிகளில் ஒன்று தனலட்சுமி வங்கி. கேரள மாநிலம் திரிச்சூரை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் ஆபிசர்ஸ் மற்றும் சீனியர் ஆபிசர்ஸ் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

 Dhanlaxmi Bank Recruitment Junior, senior Officer Posts how to apply full details

கல்வி தகுதி: ஜூனியர் ஆபிசர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படிப்பது அவசியம். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சீனியர் ஆபிசர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். முதுகலை பட்டம் என்றால் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். வங்கி துறையில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தியானவர்களும் 25- வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் பணியமர்த்தபடுவார்கள்.

தேர்வு முறை: ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். அதன்பிறகு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு நடைபெறும் இடங்கள்: டெல்லி/ டெல்லி என்.சி.ஆர்/ மும்பை, நவி மும்பை, தானே, அகமதாபாத், காந்திநகர், ஐதராபாத், விஜயவாடா, பெங்களூர், சென்னை, கோவை, கோழிக்கோடு, திரிசூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்வு கட்டணம்: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 07.12.2023 ஆம் தேதியில் இருந்து தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் 21 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.708 செலுத்த வேண்டும்.

தேர்வில் ரீசனிங்,/ ஆங்கில மொழி தேர்வு/ வங்கி பற்றிய விழிப்புணர்வு கேள்விகள், பொது பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்த வினாக்கள் இடம் பெறும். தேர்வு குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு அறிவிப்பை படிக்க https://www.dhanbank.com/pdf/46-Recruitment-of-Junior-Officers-Senior-Officers.pdf கிளிக் செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+