தேர்வு இல்லை.. இன்டர்வியூ மட்டுமே.. திண்டுக்கல் காந்திகிராம் பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு
திண்டுக்கல்: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை எழுத்து தேர்வு ஏதுமின்றி நேர்க்காணல் முறையில் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்று பயன்பெறலாம்.
மத்திய கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல்லில் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்புகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தான் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Guest and part time என்ற முறையில் டீச்சர் மற்றும் டீச்சிங் அசிஸ்டென்ட் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அதன்படி கணித துறைக்கு கணிதம், அப்ளைட் கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் எம்பில், பிஎச்டி, நெட், ஸ்லெட் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். Political Science and Development administration துறைக்கு எம்ஏ பிரிவில் டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேசன்/பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன்/பொலிடிக்கல் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் நெட், ஸ்லெட், பிஎச்டி முடித்திருக்க வேண்டும்.
மேலும் Cooperation துறைக்கு எம்காம் பிரிவில் Cooperation, Cooperative management, Coop Management, cooperation, பிரிவுகளில் நெட், செட், பிஎச்டி முடித்தவர்களும், MBA coo Mgt படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பொருளாதார துறைக்கு எம்ஏ பொருளாதாரம், எம்எஸ்சி மேத்தமெட்டிக்கல் எக்கனாாமிக்ஸ் பிரிவுகளில் எம்பில், பிஎச்சடி நெட், ஸ்லேட் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த 4 பிரிவுகளிலும் பணியை பெற விரும்புபவர்கள் வரும் 14ம் தேதி நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும்.
மேலும் சென்டர் பார் அப்ளைட் ஜியாலஜி துறைக்கு எம்எஸ்சி அப்ளைட் ஜியாலஜி, ஜியோ மட்டீக்ஸ் பிரிவில் பிச்டி முடித்தவர்களும், ஸ்கூல் ஆப் அக்ரிகல்சர் மற்றும் அனிமல் சயின்ஸ் துறைக்கு அக்ரிக்கல்சுரல் எக்ஸ்டென்சன் பிரிவில் மாஸ்டர் டிகிரி முடித்து நெட், பிஎச்டி முடித்திருக்க வேண்டும்.
பிசிஏ துறைக்கு எம்சிஏ, எம்எஸ்சி பிரிவில் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து செட், ஸ்லெட், நெட், பிஎச்டி முடித்திருக்க வேண்டும். டிபார்ட்மென்ட் ஆப் ரூரல் டெவலப்மென்ட் துறை பணிக்கு ரூரல் டெவலப்மென்ட் படிப்பில் மாஸ்டர் டிகிர முடித்து நெட், ஸ்லெட் அல்லது பிஎச்டி முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளை பெற விரும்புவோர் 16ம் தேதி நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த எந்த விபரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து நேர்க்காணல் நடக்கும் தேதிகளில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.
பணிக்கான நேர்க்காணல் என்பது காந்திகிராம் பல்கலைகழக்கழகத்தின் இந்திரா காந்தி பிளாக்கில் மேற்கூறிய 2 நாட்களில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இருப்பினும் நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே அங்கு செல்ல வேண்டும் என காந்திகிராம் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications