அரசு வேலை ரெடியா இருக்கு! திண்டுக்கல் மக்களுக்கு சூப்பர் சான்ஸ்! விண்ணப்பிப்பது எப்படி! முழு தகவல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், காவலர் ஆகிய 2 காலிபணியிடங்களை குறிப்பிடப்பட்டுள்ள மாதாந்திர தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண் சிசுக்கொலையை முற்றிலும் ஒழிக்கவும், கைவிடப்படும் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு முன்னோடி திட்டமாக தொட்டில் குழந்தை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 1992 ஆம் ஆண்டு மே மாதம் அப்போதை முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Dindigul Government Jobs

சேலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பெண் சிசுக்கொலை அதிகமாக இருந்ததாக சொல்லப்படும் மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.

பெற்றோர்களால் வளர்க்க இயலாமல் அல்லது வளர்க்க விரும்பாமல் கைவிடப்படும் குழந்தைகள் அரசு காப்பகங்களில் பாதுகாப்பாக வழக்கப்படுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் மீட்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள், கல்வி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சட்டபூர்வமான தத்தெடுப்பு முறை மூலம் குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு இந்த குழந்தைகள் தத்து கொடுக்கப்படுகிறார்கள்.

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை மேம்படுத்த இந்த திட்டம் பெரிதும் உதவி வருவதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கென அரசு மூலம் கண்காணிப்பாளர்கள் காப்பாளர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பணியர்த்தபடுகிறார்கள். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள 2 காலிபணியிடங்களை தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடத்தினை ரூ.7,500/- மாதாந்திர தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடத்திற்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், காவலர் பணியிடத்தினை ரூ.4,500/-மாதாந்திர தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடத்திற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 2 பணியிடங்களுக்கு நேர்காணல் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு 42 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், குழந்தைகளை கையாளுதலில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2-வது குறுக்குத்தெரு (மாடி), எஸ்.பி.ஆர் நகர், மாவட்டஆட்சியரகம் (அஞ்சல்), திண்டுக்கல்-624 004 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) நேரில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பித்து பயன்பெறலாம்" என மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+