Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோ எக்ஸாம்.. டிகிரி மட்டும் போதும்! ரூ.35,000 டூ ரூ.59,276 மாதஊதியம்! அழைக்கும் டிஆர்டிஓ.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டிஆர்டிஓவின் பணியாளர் திறன் மேலாண்மை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.35,220 முதல் ரூ.59,276 வரையிலான சம்பளத்தில் பணியை பெற முடியும்.

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் Defence Research And Development Organisation (DRDO) எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது.

 DRDOs CEPTAM recruitment 2023 for Project Store Officer and Project Senior Admin Assistant jobs

இது இந்தியாவின் விண்வெளித்துறை மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்களின் உற்பத்திகளை செய்து வழங்கி வருகிறது இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. அதோடு பிற மாநிலங்களில் டிஆர்டிஓவின் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

காலியிடங்கள்: அதன்படி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிஆர்டிஓவின் பணியாளர் திறமை மேலாண்மை மையம் உள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் ஸ்டோர் ஆபிசர் பணிக்கு ஒருவர், ப்ராஜெக்ட் சீனியர் அட்மின் அசிஸ்டென்ட் பணிக்கு 5 பேர், ப்ராஜெக்ட் அட்மின் அசிஸ்டென்ட் பணிக்கு 5 பேர் என மொத்தம் 11 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: இந்த 3 பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் பிஏ, பிகாம், பிஎஸ்சி, பிசிஏ அல்லது அதற்கு நிகரான படிப்பை படித்தவர்களும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ப்ராஜெக்ட் ஸ்டோர் ஆபிசர் பணிக்கு அட்மினிஸ்ட்ரேட்டஷன், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், நிதி பிரிவுகளில் 10 ஆண்டு பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களும், இந்த பிரிவுகளில் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் ப்ராஜெக்ட் சீனியர் அட்மின் அசிஸ்டென்ட் பணிக்கும், 3 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் ப்ராஜெக்ட் அட்மின் அசிஸ்டென்ட் பணிக்கும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: ப்ராஜெக்ட் ஸ்டோர் ஆபிசர் பணிக்கு 50 வயதுக்குள்ளும், ப்ராஜெக்ட் சீனியர் அட்மின் அசிஸ்டென்ட் பணிக்கு 45 வயதுக்குள்ளும், ப்ராஜெக்ட் அட்மின் அசிஸ்டென்ட் பணிக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு என்பது உண்டு என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதசம்பளம்: ப்ராஜெக்ட் ஸ்டோர் ஆபிசர் பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் ரூ.59,276 சம்பளமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் சீனியர் அட்மின் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.47,496 சம்பளமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் அட்மின் அசிஸ்டென்ட் பணிக்கு மாதசம்பளமாக ரூ.35,220 சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஓராண்டு வரை பணியமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://drdo.gov.in/ இணையதளம் மூலம் டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+