கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் ஓட்டுநர் வேலை.. ரூ.62 ஆயிரம் வரை சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
கோவை மாவட்டம் மதுக்கரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியாக உள்ள ஒரு ஓட்டுநர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓட்டுநர் பணிக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை காணலாம்.

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். இனசுழற்சி அடிப்படையில் ஆதி திராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) 42-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 09.10.2023 நாள் கடைசி நாளாகும்.
ஊதியம்: ரூ.19,500 -62,000 வரை லெவல் 8 என்ற ஊதிய விகிதத்தில் இதர படிகளுடன் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கான ஆதாரம் உள்ளிட்டவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://coimbatore.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கும் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 09.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடையும் வகையில் அனுப்ப வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/09/2023091264.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications