சென்னை ஐகோர்ட்டில் வேலை.. மாதம் ரூ. 72,000 சம்பளம்.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 13 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது காலியாக உள்ள 13 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

கல்வி தகுதி: டிரைவர் பணியிடங்களுக்கு மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும். எல்.எம்.வி டிரைவிங் லைசன்ஸ் அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை பொது பிரிவினர் 18 வயது முதல் 32-வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி/பி.சி/எம்.பி.சி/ உள்ளிட்ட பிரிவினர் 37-வயது வரை விண்ணபிக்கலாம். வயது வரம்பு தளர்வுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம்: சம்பளத்தை பொறுத்தவரை ரூ.19,500 - 71,900 வரை கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் திறன் தேர்வு & நேர்முகத் தேர்வு நடைபெறும்.
தேர்வு முறை: திறன் தேர்வை பொறுத்தவரை வாகனங்களை இயக்குதல், பழுதுபார்த்தல், சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு ஆகிய அடிப்படையில் நடைபெறும். எழுத்து தேர்விலும் தமிழ், பொது அறிவு, வாகனங்களை பற்றிய அடிப்படை அறிவு உள்ளிட்ட வினாக்கள் இருக்கும். 125 கேள்விகள் கேட்கப்படும். கொள்குறி வகையில் விடையளிக்கும் வகையில் வினாக்கள் இருக்கும்.
தேர்வு மையம்: சென்னை அல்லது பிற மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இது பற்றிய விவரங்கள் தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்படும். தேர்வு மையத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எந்த சூழலிலும் ஏற்கப்படாது. திறன் தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு சென்னையில் நடைபெறும். தேர்வு பற்றி அனைத்து அறிவிப்புகளும் மெட்ராஸ் உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளம் மூலம் வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 13.02.2024 கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்திற்கான கட்டணம் ரூபாய் 500 ஆகும். தேர்வர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன்பு தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பை படிக்க https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION%20-%20Driver%20(ENGLISH).pdf இங்கே கிளிக் செய்யவும்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications