மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. லட்சத்தில் சம்பளம்.. ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அருமையான சான்ஸ்
சென்னை: மத்திய அரசின் என்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL ). நாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தொழில்நுட்பங்களை அளிக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்திற்கு மும்பை, கொல்கத்தா, சென்னை, வதோதரா உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 17 ஜூனியர் வரைவாளர் ( Draftsman ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

கல்வி தகுதி: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமண்டேஷன், ஃபையர்ட் உபகரணங்கள், பைப்பிங் என 12 வகையான பிரிவுகளில் மொத்தம் 17 ஜூனியர் வரைவாளர் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பணியிடத்திற்கு ஏற்ப ஐடிஐ, டிப்ளமோ பாடப்பிரிவு மாறுபடும். அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி மற்றும் அனுபவம் குறித்த முழுமையான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்புவர்களுக்கு 31.08.2024 தேதிப்படி 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
ஜூனியர் வைரைவாளர் கிரேடு III - ரூ.24,000- 90,000
கிரேடு II - ரூ.25,000 - 1,00,000/-
கிரேடு I - ரூ.26,500 - 1,15,000
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.09.2024-க்குள் https://recruitment.eil.co.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruitment.eil.co.in/hrdnew/others/FINAL_ONLINE_detailed_advertisement_2024-25-02.pdf
-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications