இளம் வயதினரை தேடி வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா.. மைசூரு போனால் வேலை ரெடி

Subscribe to Oneindia Tamil

மைசூர்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்தில் டிகிரி படித்த பட்டாதாரிகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்த 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

கர்நாடகா மாநிலம் மைசூரில் போய் வேலை பார்க்க வேண்டும். நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்டையில் வேலை பார்க்க விரும்புவோர் www.ecil.co.in இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். அத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் 2 (புளு கலர் பேக்ரவுண்ட்) ஆகியவற்றை எடுத்துக்கொண்டு 17ம் தேதி காலை நேராக மைசூருக்கு செல்லுங்கள்.

வரும் ஏப்ரல் 17ம் தேதி ஜூனியர் ஆர்டிசன் பணிக்கு 17ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும். அதன்பின்னர் அப்படியே நேர்முகத்தேர்வும் நடைபெறும். அதாவது 2 முதல் 3 நாட்கள் தேர்வுக்கான நடைமுறைகள் இருக்கும். எனவே இந்த வேலையில் சேர விரும்புவோர் மைசூரிலேயே வேலைக்கான தேர்வு முறைகள் முடியும் வரை சொந்த செலவிலேயே தங்கி கொள்ள வேண்டும்.

மைசூரில் வேலை

மைசூரில் வேலை

இதேபோல் அலுவலக உதவியாளர் மற்றும் விஞ்ஞானி உதவியாளர் ஆகிய பணிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி தேர்வு நடைபெறுகிறது விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து நிரப்பி, சான்றிதழ்களுடன் நேரடியாக மைசூருக்கு செல்ல வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் மைசூரில் அட்டாமிக் எனர்ஜி சென்ட்ரல் ஸ்கூல், ஆர்எம்பி எல்வால் காலனி, ஹன்சூர் ரோடு, யெல்வால் அஞ்சல், மைசூர்-571130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

பிஎஸ்சி வேதியியல்

பிஎஸ்சி வேதியியல்

Scientific Assistant-A on Contract பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் அல்லது டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உள்பட ஏதேனும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Chemical discipline:
பணிக்கு பிஎஸ்சி வேதியியல் படித்திருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2 முடித்துவிட்டு வேதியியல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஐஐடி தேர்ச்சி

ஐஐடி தேர்ச்சி

Junior Artisan on Contract: பணிக்கு Electronics & Communication / Instrumentation / Electrician / Fitter ஆகிய துறைகளில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். Chemical Plant Operator பணிக்கு இயற்பியல் வேதியியல், கணிதம்பாடங்களுடன் பிளஸ் வில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

முக்கிய விவரங்கள்

அலுவலக உதவியாளர் பணிக்கு B.Sc. / B.A. / B.Com உள்ளிட்ட பிரிவில்பட்டம் படித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
ஊதியம்; மாதத்திற்கு ₹ 18,882 (Junior Artisan on Contract )
மாதத்திற்கு ₹ 20,802 pm ( Scientific Assistant-A on Contract, Office Assistant on Contract)
மொத்த காலிபணியிடங்கள்: 111
தேர்வுக்கு செல்ல வேண்டிய தேதிகள்: 17/04/2021 மற்றும் 18.4.2021
முழு விவரத்தை இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+