10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. சென்னை கடலோர காவல் படையில் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்
சென்னை: சென்னை கடலோர காவல் படையில் டிரைவர், பல்நோக்கு பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானதாகும்.
சிவிலியன் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் பிரிவில் 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) காலியாக இருக்கின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 27க்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமமும், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதி உள்ளவர்கள் இப்பணிகளுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

அதேபோல ஷீட் மெட்டல் வொர்க்கர் பணிக்கு 1 காலியிடம் (ஒபிசி) இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட ஐடிஐ தேர்ச்சியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல மல்டி டாஸ்கிங் ஊழியர்களுக்கான காலிப்பணியிடங்களும் இருக்கின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மட்டுமல்லாது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் வொர்க்ஷாப்பில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல Unskilled Labour பிரிவில் 2 காலி பணியிடங்கள் (பொது-1, எஸ்சி-1) இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இந்த அனைத்து காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்வர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டு களும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் கலந்து கொள் ளும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டணம்/பஸ் கட்டணம் வழங்கப்படும்.
மாதிரி விண்ணப்பத்தை http://indian-coastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தபாலில் The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St., George (PO), CHENNAI- 600 009 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் மாதம் 18ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications