ஜப்பான் பள்ளிகளில் ஆங்கில மொழி உதவி ஆசிரியர் வேலை.. ஆண்டுக்கு 20 லட்சம் சம்பளம்.. முழு விவரம்
டோக்கியோ: ஜப்பானியப் பள்ளிகளில் ஆங்கில மொழி உதவி ஆசிரியர் (English Assistant Language Teacher) ஆகப் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்கு ரூ.20 இலட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.. அதற்கு நீங்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் (எழுதவும், பேசவும்) புலமைப்பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு பெற்றிருந்தால் கூடுதல் பலம் ஆகும்.
உலகில் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்று ஜப்பானில் நல்ல வேலைவாய்ப்பு, நல்ல சம்பளம், தரமான கல்வி, மிகச்சிறப்பான எதிர்காலம் போன்றவை உள்ளன. உலகில் பல்வேறு தொழில்நுட்பங்களை தினமும் கண்டுபிடித்து வரும் ஜப்பானில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாக ஜப்பானில் வேலைவாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

ஜப்பானை பொறுத்தவரை ஸ்கில்டு மேன்பவர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், தொழில்நுட்ப பணியாளர்கள் 18 லட்சம் பேர் வரை தற்போது தேவைப்படுகிறார்கள். அவ்வளவு பணியாளர்கள் அந்த நாட்டில் இல்லை என்பதால், ஜப்பான் மொழி தெரிந்தவர்களை தேவையான வேலைக்கு அந்நாடு எடுத்துக் கொள்கிறது. எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் உற்பத்தியில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதேபோல் மெக்கானிக்கல், ஏஐ, எம்எல் போன்ற துறைகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவை உள்ளது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிட்டாலிட்டி, நர்சிங் உள்பட பல்வேறு துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்தியாவை ஒப்பிடும் போது ஜப்பானில் எந்த வேலைக்கும் 3 முதல் 6 மடங்கு அதிக சம்பளம் கிடைக்கும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், என்ஜினியர்கள் என்2 லெவல் என்றால் ஆண்டுக்கு 21 லட்சம் சம்பளம் கிடைக்கும். என்ஜினியர் அல்லாத என்4 லெவல் பணிகள் என்றால் 12 முதல் 15 லட்சம் சம்பளம் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் கிடைக்கும். ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்றால், ஜப்பான் மொழி கற்க வேண்டும். ஜப்பான் மொழியை தமிழக அரசே, தமிழ் வழியில் ஜப்பானிய மொழி படிக்க அருமையான வாய்ப்பை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. இதற்கான ரிஜிஸ்ட்ரேசன் கூட அண்மையில் தான் நடந்து முடிந்தது..

இதனிடையே ஜப்பானியப் பள்ளிகளில் ஆங்கில மொழி உதவி ஆசிரியர் (English Assistant Language Teacher) ஆகப் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்கு ரூ.20 இலட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.. அதற்கு நீங்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் (எழுதவும், பேசவும்) புலமைப்பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு பெற்றிருந்தால் கூடுதல் பலம் ஆகும். ஜப்பான் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: December 6, 2024.

மேலதிக தகவல்களுக்கு https://www.facebook.com/story.php?story_fbid=465404876515458&id=100091378489632&mibextid=WC7FNe&rdid=WCMT0BxwfHQ6YYfx என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
சென்னை ஜப்பான் எக்ஸ்போ: ஜப்பானில் பல்வேறு கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து சார்ந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் சென்னையில் உள்ள வி.ஆர்., மாலில் நவம்பர் 9ம் தேதி காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சி நடைபெற உள்ளது. ஜப்பானின் கல்வி முறை, பல்கலைக்கழகங்கள், பாடப்பிரிவுகள், மாணவர் சேர்க்கை முறை, தகுதிகள், தேவையான ஆவணங்கள், உதவித்தொகை திட்டங்கள், வேலை வாய்ப்பு உட்பட ஏராளமான தகவல்களுக்கு https://www.jasso.go.jp/en/index.html மற்றும் https://www.studyinjapan.go.jp/en/ ஆகிய இணையதளங்களில் அறியலாம்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications