Freshers-களுக்கு பிரத்யேக அறிவிப்பு.. சென்னையில் ஐடி வேலைவாய்ப்பு.. இன்றும் - நாளையும் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து பணி அனுபவம் இல்லாத Freshersகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது இன்றும் (ஏப்ரல் 29), நாளையும் (ஏப்ரல் 30) நடைபெற உள்ளது.
தற்போது ஐடி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. அந்த வகையில் சென்னையில் இயங்கும் ஐடி நிறுவனம் பணி அனுபவம் இல்லாதவர்களை அழைக்கிறது.

அதாவது சென்னையில் eNoah iSolution India Pvt LTd என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது பணி அனுபவம் இல்லாதவர்களுக்கு என்று புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி Openings for Freshers in IT என்ற பெயரில் அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. eNoah ஐடி நிறுவனத்தில் தற்போது வெளியாகி உள்ள பணிக்கான இண்டர்வியூவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி படிப்பு அல்லது எம்சிஏ படிப்பை 2025ம் ஆண்டில் படித்து முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி Freshers என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த மாதிரியான பணி வழங்கப்படும். மாதசம்பளம் என்ன? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன.
இந்த பணிக்கான இன்டர்வியூ என்பது ஏப்ரல் 29(இன்று), ஏப்ரல் 30(நாளை) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இரண்டு நாட்களும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இண்டர்வியூ என்பது நடைபெறும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்பாகவே இண்டர்வியூ நடக்கும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூ என்பது eNoah iSolution India Pvt Ltd, KURIOS Software Park, 5th Floor, No:25, Sai Nagar, Ambattur Industrial Estate, Chennai - 600 058 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக [email protected] என்ற முகவரிக்கு Resume அனுப்பி வைக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications