தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புள்ள துறை.. அண்ணா பல்கலையால் அருமையான வாய்ப்பு
சென்னை: எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புள்ள துறை என்றால் இது இவி டெக்னாலஜி துறை தான். தமிழ்நாட்டில் நிறைய சர்வதேச முதலீடுகள் இந்தத் துறையில் தான் வந்திருக்கின்றன. இவி பேட்டரி குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இது இளைஞர்களுக்கு மிக அற்புதமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்திக்க போகும் துறை என்று சொன்னால் அது நிச்சயம் இவி டெக்னாலஜி துறை தான். மின்சார வாகனங்கள், மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள், மின்சார வாகனங்களின் பேட்டரி பழுதுபார்ப்பு, பராமரிப்பு போன்றவை தான் இனி மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்று கணித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின் அண்மையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் இவி டெக்னலாஜி துறை தான். மின்சாரம், மின்சாரம் சார்ந்த வாகனங்கள், மின்சார பேட்டரிகளின் உற்பத்தி மையமாக தமிழகம் திகழப்போகிறது. இந்த சூழலில் இவி டெக்னாலஜி துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் வரும் காலத்தில் உருவாக போகிறது. எனவே இப்போதே விழிப்புடன் இந்த துறை சார்ந்த வேலைகளில் அல்லது தொழில்களில் இறங்கினால் மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கும்.
இந்த சூழலில் தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள், பேட்டரி பேக்கிங், இவி டெக்னாலஜி, மின்சார பேட்டரி பயன்பாடு, சூப்பர் கெபாசிட்டர், ரீசைக்லிங் உள்ளிட்ட இவி டெக்னாலஜி குறித்த சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.
லித்தியம் ஐயர்ன் பேட்டரி துறையில் நுழைய விரும்புவோர். மின்சார வாகனங்களின் பேட்டரி டெக்னாலஜி துறையில் வேலை பார்ப்போர். என்ஜினியர்கள், டெக்னீசியன்கள், ஸ்டார்ட் அப், ஆலோசகர்கள், பொறியியல் படிப்புகளை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.
இந்த பயிற்சியில் சேர ஜனவரி 29ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொழிற்துறையினர் பயிற்சி கட்டணமாக 10000 பிளஸ் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். ஆசிரியர்களுக்கு 5000 பிளஸ் ஜிஎஸ்டியும், மாணவர்களுக்கு 3000 பிளஸ் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். பெரும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மெட்ராஸ் ஐஐடிக்கு அழைத்து சென்று பேட்டரி தொழில் நுட்பம் குறித்து கற்றுக் கொடுப்பார்கள். அதே போல் சேலம் பேர்ட்ஸ் இண்டியா லித்தியம் அயர்ன் பேட்டரி தொழிற்சாலைக்கு அழைத்து சென்றும் கற்றுக்கொடுப்பார்களாம்.. வாய்ப்பை தவறவிட வேண்டாம்.












Click it and Unblock the Notifications