வங்கியில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்தாலே போதும்! ஆரம்பமே 37 ஆயிரம் சம்பளம்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: ஃபெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமே ரூ.37 ஆயிரம் வழங்கப்படும். இது ஒரு நிரந்தர பணியிடமாகும்.
இந்தியாவில் இயங்கி வரும் தனியார் வங்கிகளில் ஒன்று ஃபெடரல் வங்கி. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. கேரள மாநிலம் ஆலுவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

பணியிடங்கள் விவரம்:
இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது, உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், ஃபெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கல்வித் தகுதி:
* இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1.12.2025 அன்று தேதிப்படி 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
வயது வரம்பு:
* வயது வரம்பை பொறுத்தவரை 1.12.2025 அன்று தேதிப்படி 18 முதல் 20 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (அதாவது 1.12. 2005 முதல் 1.12. 2007 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்கள்).
* SC, ST பிரிவினர் 18 முதல் 25 வயது வரம்புக்குள் இருக்க வேண்டும் (அதாவது டிசம்பர் 1, 2000 மற்றும் டிசம்பர் 1, 2007 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்கள்).
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை
ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை கணிதம், ஆங்கிலம், கணினி அறிவு குறித்த கேள்விகள் இடம்பெறும். தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.. விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியல் சாதி (SC) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்க வரும் 8 ஆம் தேதி தான் கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் www.federal.bank.in தளத்தில் சென்று Careers பக்கத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications