மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை.. 83 காலியிடம்.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 83 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலி பணியிடங்கள்: 83

ஆலோசகர் (1)
இயக்குநர் (7),
இணை இயக்குநர் (2),
துணை இயக்குநர்(2),
உதவி இயக்குநர் (10),
நிர்வாக அலுவலர் (20),
உதவியாளர் (8),
மூத்த தனியார் செயலாளர் (4),
தனி செயலாளர் (15),
மூத்த மேலாளர் (2), மேலாளர் (4)
துணை மேலாளர் (8)

FSSAI Recruitment 2020 - Notification for 83 Manager, Administrative Officer, Assistant & Other Jobs

உள்ளிட்ட 83 பணியிடங்களுக்கு மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

கல்வித்தகுதி: எந்த பதவியை விரும்புகிறார்களோ அந்த துறையில் பட்டம், முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ, பிஇ, பி.டெக், எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 56க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: Deputation basis மற்றும் Short Term Contract basis அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது: https://www.fssai.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

மேலும் முழுமையான விவரங்களை https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/Circular_Posts_Deputation_Contract_09_03_2020.pdf என்பதில் அறியலாம். அல்லது https://www.fssai.gov.in/ இணையதளத்தில் அறியலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2020

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+