‛‛மதுரையில் அசத்தலான வேலை’’.. நாளை, நாளை மறுநாள் நேரடி இன்டர்வியூ.. அழைக்கும் Getinz

Subscribe to Oneindia Tamil

மதுரை: பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு பணியை Getinz எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மதுரையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள டெக்னிக்கல் ரெக்ரூட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் நாளை, நாளைமறுநாள் என 2 நாட்கள் நடக்கும் இன்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.

Getinz.. பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வழங்கும் ஒரு ஆட்சேர்ப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

it job jobs madurai

இந்நிலையில் தான் மதுரையில் செயல்பட்டு வரும் Getinz நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி Getinz நிறுவனத்தில் டெக்னிக்கல் ரெக்ரூட்டர் (Technical Recruiter) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பணியை விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும், டிகிரி முடித்து பணி இடைவெளி இருப்பவர்களும் தாராளமாக விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு Recruitment Consultancies பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அல்லது அதுபற்றிய நல்ல புரிதலை கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பிழையின்றி சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஐடி நிறுவனத்துக்கான ஆட்சேர்ப்புக்கான ஜாப் போர்ட்டல், சோசியல் மற்றும் ப்ரோபெஷனல் நெட்வொர்க்கிங் சைட்டிங்கில் அனுபவம் கொண்டிருந்தால் இன்னும் சிறப்பானதாகும்.

மேலும் Negotiation Skills இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பூஜ்ஜியம் முதல் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் நேரடி இன்டர்வியூவில் பங்கேற்கலாம். இதன்மூலம் பணி அனுபவம் இன்றி மேற்கூறிய திறமை இருப்பவர்கள் கூட விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு திறமை மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அனைவரும் மதுரையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த நிறுவனத்தில் காலை 9 .30 மணி முதல் இரவு 7.30 மணி வரை வேலை இருக்கும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மதுரையில் உள்ள Getinz நிறுவனத்துக்கு நேரில் சென்று இன்டர்வியூவில் பங்கேற்கலாம். மதுரையில் இந்த நிறுவனம் என்பது 184, 1வது மற்றும் 2வது தளம், வடக்குவெளி தெரு, மதுரை தெற்கு (Duke ஹோட்டல் எதிரே) பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தான் ஜுலை 11 மற்றும் ஜுலை 12 ஆகிய தேதிகளில் இன்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி உள்ளவர்கள் இந்த இன்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected], [email protected] என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+