மாதசம்பளம் ரூ.53,000.. 10ம் வகுப்பு முடித்தாலே போதும்! கப்பல் கட்டுமான நிறுவனத்தில் அசத்தல் வேலை!
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் ‛கோவா ஷிப்யார்ட் லிமிடெட்' எனும் கப்பல் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 106 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.53 ஆயிரம் வரையிலான சம்பளத்தை பணியை பெறலாம்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவின் வாஸ்கோடகாமாவில் ‛கோவா ஷிப்யார்ட லிமிடெட்' (Goa Shipyard Limited) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்தியாவின் மற்றும் நட்பு நாடு உட்பட பிற வாடிக்கையாளர்களுக்கு கப்பல்களை வடிவமைத்து உருவாக்கி வருகிறது.

இங்கு மொத்தம் 18 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் மொத்தம் 106 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அசிஸ்டென்ட் சூப்பிரண்ட் பிரிவில் எச்ஆர் பணிக்கு 2 பேர், ஹிந்தி டிரான்ஸ்லேட்டர் பணிக்கு ஒருவர், சிஎஸ் பணிக்கு ஒருவர் என 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பணிக்கு தலா 4 பேர், ஷிப்பில்டிங் பணிக்கு 20 பேர், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில், ஐடி பணிகளுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிவில் கிளர்க் ஸ்டாப் (clerical staff) பணிக்கு 32 பேர், பைனான்ஸ்/ஐஏ பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் பெயிண்டர் பணிக்க 20 பேர், டிரைவர் பணிக்கு 5 பேர், ஆவண பராமரிப்பாளர் பணிக்க 3 பேர், சமையல் தொழிலாளர் பணிக்க 3 பேர், பிளம்பர் பணிக்கு ஒருவர், Safety Steward பணிக்கு ஒருவர் என மொத்தம் 106 பணியிடங்கள் நிரப்பபப்பட உள்ளது.
மாத சம்பளம்: அசிஸ்டென்ட் சூப்பிரண்ட் பிரிவில் எச்ஆர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.48 ஆயிரம் முதல் ரூ.53 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். அசிஸ்டென்ட் சூப்பிரண்ட் ஹிந்தி டிரான்ஸ்லேட்டர், சிஎஸ் பணிகளுக்கு ரூ.41,400 முதல் ரூ.45,700 வரை வழங்கப்படும். அனைத்து பிரிவு டெக்னீக்கல் அசிஸ்டென்ட் பணிகளுக்கும் மாதம் ரூ.31,200 முதல் ரூ.34,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிவில் கிளர்க் ஸ்டாப் (clerical staff) பணிக்கு ரூ.34,300 மதல் ரூ.38 ஆயிரம் வரையும், ஆபிஸ் அசிஸ்டென்ட் பைனான்ஸ்/ஐஏ பணிக்கு ரூ.29,500 முதல் ரூ.32,600 வரையும் சம்பளம் வழங்கப்படும். பெயிண்டர், டிரைவர், பிளம்பர், பணிக்கு ரூ.31,700 முதல் ரூ.35 ஆயிரமும், ஆவண பராமரிப்பாளர் பணிக்கு ரூ.27,200 மதல் ரூ.30,100 வரையும், சமையல் தொழிலாளர் டெல்லிக்கு என்றால் ரூ.31,700 முதல் ரூ.35 ஆயிரமும், கோவா என்றால் ரூ.27,200 மதல் ரூ.30,100 வரையும் சம்பளம் என்பது வழங்கப்படும். Safety Steward பணிக்கு ரூ.33,400 மதல் ரூ.36,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பிபிஏ, ஹிந்தியில் இளங்கலை பட்டப்படிப்பு, டிகிரியில் பர்ஷனல் மேனேஜ்மென்ட், இன்டஸ்ட்ரியல் ரிலேஷன், லேபர் லா, லேபர் வெல்பர், பிஎஸ்டபிள்யூ, பிஏ சோசியல் வொர்க், பிஏ சோசியலாஜி, பிகாம், டிப்ளமோ என்ஜினீயரிங் பிரிவில் இன்ஸ்ட்ரூமென்டல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஷிப் பில்டிங், சிவில், ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மேலும் 10ம் வகுப்பு, ஐடிஐ, டிரைவிங் தெரிந்து லைசென்ஸ் வைத்திருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். படிப்பு என்பது ஒவ்வொரு பணியை பொறுத்து மாறுபடும். அதுபற்றிய விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் விரிவாக உள்ளது.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 36 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு என்பது அளிக்கப்படும். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேற்கொண்டு தேவையென்றால் 2 ஆண்டு வரை பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் மாதம் 27 ம் தேதிக்குள் https://goashipyard.in/ எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications