ரூ.66,000 டூ ரூ.1 லட்சம் வரை மாதசம்பளம்.. பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினியர் வேலை.. அழைக்கும் கூகுள்
சென்னை: கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
கூகுள்.. இந்தியா உள்பட உலகம் முழுவதும் அனைவரும் பயன்படுத்தும் தேடிப்பொறி (Search Engine)தளமாக உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கூகுளில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் காலியாக உள்ள சாப்ட்வேர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கூகுளில் சாப்ட்வேர் பணியிடங்கள் நிரப்பபப்பட உள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடப்படாத நிலையில் ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்ச தகுதி என்பது டிகிரி முடித்து Software Development-ல் ஓராண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இல்லாவிட்டால் டிகிரி முடித்து பைத்தான், சி, சி++, ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். மேலும் பிஇ, எம்இ, எம்டெக் பிரிவில் கம்ப்யூட்டர் என்ஜினியர், சாப்ட்வேர் என்ஜினியர், கம்ப்யூட்டர் சயின்ஸில் பிஎச்டி முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மேலும் யூனிக்ஸ், லினக்ஸ், நெட்வொர்க்கிங் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அதன்படி மாதசம்பளமாக ரூ.66 ஆயிரம் கிடைக்கும். அதிகபட்சம் என்றால் ரூ.12 லட்சம் வரை (மாதசம்பளம் ரூ.1 லட்சம்) சம்பளம் வழங்கப்படும். சம்பளம் என்பது ஒவ்வொருவரின் திறமையை பொறுத்தது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் பணியமர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு பார்த்து விண்ணப்பம் செய்ய Click Here
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications