சென்னையில் ரூ.27,000 சம்பளத்தில் வேலை.. நேரடியாக இன்டர்வியூவுக்கு போகலாம்.. அழைக்கும் அரசு நிறுவனம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சமீர் நிறுவனத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவுதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.27 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் Society for Applied Microwave Electronics Engineering and Research (SAMEER) செயல்பட்டு வருகிறது. மும்பை ஐஐடி வளாகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்துக்க சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், கவுஹாத்தியில் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.

இந்நிலையில் தான் சமீரின் சென்னை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - ஏ, ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - பி, ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - சி, மெக்கானிக்கல் பிரிவில் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - பி, ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - சி, எலக்ட்ரிக்கல் பிரிவில் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - ஏ, ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - பி, ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - சி, சிவில் பிரிவில் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - ஏ, ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - பி, ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - சி பணியிடங்கள் என மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் எலக்ட்ரானிக்ஸ் பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் மெக்கானிக்கல் பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பையும், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் சிவில் பணிக்கு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு - சம்பளம்: இந்த பணிக்க விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் ருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எந்த வயது தளர்வும் கிடையாது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 துறைகளிலும் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - ஏ பணி என்றால் மாதம் ரூ.17 ஆயிரம், ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - பி பணி என்றால் ரூ.21,500, ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - சி பணி என்றால் ரூ.27 ஆயிரம் மாதசம்பளமாக வழங்கப்படும்.
நேர்க்காணல் எப்போது: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கும் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். அப்போது எழுத்துதேர்வு மற்றும் இன்டர்வியூ நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படும். அதன்படி வரும் 24ம் தேதி எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் துறைகளுக்கான ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கும், 25ம் தேதி எலக்ட்ரிக்கல், சிவில் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக்கும் இன்டர்வியூ என்பது நடைபெறும்.
இன்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் குறிப்பிட்ட நாளில் காலை 9 மணிக்குள் செல்ல வேண்டும். 9.30 மணிக்கு பிறகு செல்வோருக்கு அனுமதி என்பது கிடையாது. நேர்க்காணலில் பங்கேற்போர் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSejLc9r1aW-sQHmCMjFhlKRNnuq2q1-pKOH7m61xUy7ssknYA/viewform விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தியிட்டு பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு நேர்க்காணலுக்கு தங்களின் படிப்பு தொடர்பான ஒரிஜினல் சான்றிதழ், நகல்களில் சுயயொப்பமிட்ட சான்றிதழ்களை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் வோட்டர் ஐடி, பான் கார்டு, லைசென்ஸ், பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்டவற்றில் ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும். நேர்க்காணல் என்பது SAMEER - Centre for Electromagnetics, CIT Campus,2nd cross Road, Taramani, Chennai-600 113 என்ற இடத்தில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட பிற இடங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு - விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications