அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் வாய்ப்பு! உதவி தொகை.. ஒரு வருட பயிற்சி! யார் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு வருட தொழிற்பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இதுதவிர பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட படிப்பு முடித்த இளைஞர்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு வருட தொழிற்பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., விடுத்துள்ள அறிக்கையில்," கும்பகோணம் திருச்சி மண்டலம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக தகுதியான பொறியியல் பட்டம்,பட்டயபடிப்பு (இயந்திரவியல்/தானியியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை/அறிவியல்/வணிகம் பட்டதாரிகள் 2020,2021,2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் (Online) வழியாக வரவேற்கப்படுகின்றன.
மேலும் விபரங்களுக்கு இணையதளம் www.boat-srp.com (Newsமற்றும்Events column) ஐ பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை.8 என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்த ஒரு வருட தொழிற் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications