குரூப்-4 தேர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது? 10,000 காலியிடங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல லட்சம் பேர் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வு அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், 10,000 காலியிடங்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியராக விரும்புவோருக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்றால் அது டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-4 தேர்வுதான். இதில் ஆண்டுதோறும் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை அரசு ஊழியர்களாக மாறுகிறார்கள். மற்ற தேர்வுகளில் 1,000 முதல் 2,000 பேர் கூட சேர முடிவதில்லை. குறிப்பாக, குரூப்-1 தேர்வு மூலம் 100 பேர் கூட உயர் அதிகாரிகளாக மாறுவதில்லை; அந்த அளவிற்கு அதில் குறைவான பணியிடங்களே ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன.

Group-4 exam notification to be released today Possibility of 10 000 vacancies being announced

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிடும். அதன்படியே தேர்வுகளை நடத்தி ஓராண்டிற்குள் ஆட்களைத் தேர்வு செய்வது வழக்கம். டி.என்.பி.எஸ்.சி. வழக்கமாக குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-3, குரூப்-4, குரூப்-5 எனப் பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில் எந்தப் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறித்த தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. அந்த அட்டவணையில் குறிப்பிட்டிருந்தபடி, இதுவரை குரூப்-1, குரூப்-2ஏ உள்ளிட்ட சில பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுத் தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், பல லட்சம் பேர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குரூப்-4 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்ருந்தது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கிய சூழலில், எப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் குரூப்-4 தேர்வர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இதனிடையே, குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்றோ அல்லது இந்த வார இறுதிக்குள்ளோ வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு குரூப்-4 பதவிகளில் 5,307 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை எழுத 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்ததில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

இந்த நிலையில், நடப்பாண்டில் சுமார் 10,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம் என்றும், அதற்குச் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கக் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசு கூடுதல் பணியிடங்களை நிரப்ப விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

குரூப்-4 தேர்வைப் பொறுத்தவரை கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணிக்கு 42 வயது வரையிலும், வனக்காவலர் பணிக்கு 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற மற்ற பணிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+