மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 1,40,000 வரை சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் (HAL) வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலை வாய்ப்பை பெற விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு? உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் பெங்களூரில் உள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் தற்போது 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசைன் டிரெய்னி (DT) / மேனேஜ்மண்ட் டிரெய்னி (MT) ஆகிய பணியிடங்களை நிரப்பபட உள்ளன. இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு? உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.

காலிப்பணியிடங்கள்: டிசைன் - டிரெய்னி ஏரோநாட்டிக்கல் 09(பணியிடங்கள்), டிசைன் டிரெய்னி- எலக்டிரிக்கல் (12), டிசைன் டிரெய்னி- எலக்ட்ரானிக்ஸ் (44) , டிசைன் டிரெய்னி - மெக்கானிக்கல் (30), மேனேஜ்மண்ட் டிரெய்னி (டெக்னிக்கல்) - கம்ப்யூட்டர் சயின்ஸ் (23), மேனேஜ்மண்ட் டிரெய்னி (டெக்னிக்கல்) - எலக்ட்ரிக்கல் 16, மேனேஜ்மண்ட் டிரெய்னி (டெக்னிக்கல்)- எலக்ட்ரானிக்ஸ் (13), மேனெஜ்மெண்ட் டிரெய்னி டெக்னிக்கல்-30, மேனேஜ்மெண்ட் டிரெய்னி (டெக்னிக்கல்) உற்பத்தி -05, மேனஜ்மெண்ட் டிரெய்னி (டெக்னிக்கல்) Metallurgy -03 பணியிடங்கள் என மொத்தம் 10 வகையான பணியிடங்களையும் சேர்த்து 185 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து என்ஜினியரிங்க் முடித்து இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பதவிகளுக்கு ஏற்ப துறை சர்ந்த பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்,சி/எஸ்.டி, பிடபிள்யூடி உள்ளிட்ட பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய விரிவான விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 22.08.2023 தேதியன்று 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: முதல் 52 வாரங்கள் பயிற்சிகாலமாக கருதப்படும். இந்த கால கட்டத்தில் அடிப்படை ஊதியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சி காலம் நிறைவுக்கு பிறகு கிரேட் II ஸ்கேல் பே - படி ரூ. 40,000- 1,40,000/- வரை சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு பெறுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். விண்ணப்பிக்க வரும் 22 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் தேதி, முடிவுகள் வெளியாகும் தேதி, பணி நியமனம் உள்ளிட்டவை குறித்த தோராயமான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: இது பற்றிய விவரத்தை:
தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரரர்கள்
https://cbexams.com/halreg2023/Default என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
-
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications