Data Lead உள்பட 13 பிரிவில் பணியிடங்கள்.. அழைக்கும் சாம்சங் துணை நிறுவனம்.. கோவையிலேயே பணி
கோவை: சாம்சங்கின் துணை நிறுவனமான ஹார்மன் (Harman) கோவையில் சரவணம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 13 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று சாம்சங். இதன் துணை நிறுவனமாக ஹார்மன் (Harman) செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் டெஸ்க்டாப் அப்ளிகேஷன் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களுக்கான கிராஸ் பிளாட்பார்ம் ரன்டைம் சிஸ்டம் AIR and Flash, ஏகேஜி மைக்ரோ போன்/ஹெட்போன்ஸ், ஏஎம்எக்ஸ் எனும் வீடியோ ஸ்வீட்சிங் மற்றும் கன்ட்ரோல் டிவைஸ் உள்பட பல பிராண்டுகளின் சேவைகளை வழங்கி வருகிறது.
ஹார்மன் நிறுவனம் கோவை சரவணம்பட்டியில் உள்ள CHIL SEZ IT Park-ல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது 13 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி
* Data Engineer
* Big Data Architect
* Big Data Manual QA
* Lead - Data Platform Operations
* Big Data Automation QA
* Data Manager
* Data Lead
* Dynamics 365 CRM Engineer
* Functional Tester
* Sr. Data QA உள்ளிட்ட பெயர்களில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை விரும்புவோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 10 முதல் 12 ஆண்டு பணி அனுபவம் மற்றும் 5 க்கும் அதிகமான ஆண்டுகள் டெலிகாம் அறிவு பெற்றிருக்க வேண்டம். அதேபோல் SAFe Product Owner/ product Manger, SAFe teams உள்ளிட்டவற்றில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
டேட்டா வார்ஹவுசிங் ஆர்க்கிடெக்ச்சர், Azure உள்ளிட்டவற்றில் ஸ்ட்ராங் நாலெட்ஸ் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் டேட்டா புராஜெக்ட்ட், ஸ்டாக்ஹோல்டர் மேனேஜ்மென்ட், மேனேஜிங் மற்றும் கோ ஆடிநேட்டிங் டீம் உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். Agile Methodologies பற்றிய புரிதல் இருக்க வேண்டும். டெக்னிக்கல் என்விரான்மென்ட்டுக்கு ஏற்ப பிசினஸ் அனலிசிஸ் திறன் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பம் செய்யலாம். கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படாததால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications