Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க 10 ஆம் வகுப்பு பாஸா ? 3 வருஷம் அனுபவம் இருக்கா? மாசம் ரூ 1.34 லட்சம் சம்பளத்தில் வேலை ரெடி

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் இருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படுகிறார்கள். இதற்காக கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்து முடித்துவிட்டு பல இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அது போல் குறைந்த தகுதியுடையவர்களும் வேலை வாய்ப்புக்காக அடுத்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Haryana government is recruiting 10,000 workers for Israel

அப்படியே சென்றாலும் அவர்களுக்கு சொற்ப அளவு ஊதியமே கிடைக்கிறது. இந்த நிலையில் ஹரியானாவில் உள்ள பொதுத் துறை நிறுவனமான ஹரியானா கவுஷல் ரோஜ்கர் நிகாம் எனும் நிறுவனம் இஸ்ரேலில் உள்ள கட்டுமான துறைக்கு ஆட்களை எடுக்க விளம்பரம் கொடுத்துள்ளது.

மொத்தம் 10 ஆயிரம் பேரை இந்த துறைக்கு எடுக்க போகிறது. இஸ்ரேலில் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி போர் தொடங்கியது. இதையடுத்து 90 ஆயிரம் பாலஸ்தீனர்களின் பணி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு கட்டுமானங்கள் அப்படியே முடங்கியுள்ளன.

இதனால் ஹரியானாவில் உள்ள வேலை வாய்ப்பின்மையை குறைக்க அங்கிருந்து இஸ்ரேலுக்கு ஆட்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 25 முதல் 54 வரை வயது இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் கட்டுமான துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு 6100 இஸ்ரேலி கரென்சி மாதந்தோறும் வழங்கப்படும். (ஒரு இஸ்ரேலி கரென்சிக்கு இந்திய மதிப்பில் 22 ரூபாய் ஆகும்).

எனவே 6100 இஸ்ரேலி கரென்சி என்றால் இந்திய மதிப்பில் மாதந்தோறும் ரூ 1.34 லட்சம் ஊதியம் பெறுவார்கள். விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டுமான துறையில் அனுபவமிக்கவர்களாக இருத்தல் வேண்டும். மர வேலைகள் செய்ய தெரிந்திருக்க வேண்டும், பிளாஸ்டரிங், இரும்பு வார்த்தல், தரைகளுக்கு செராமிக் டைல்ஸ் போடும் பணிகள் தெரிந்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+