சென்னையில் நாளை இண்டர்வியூ.. HCL நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. ஐடி வேலைக்கு ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

hcl-direct-walk-in-for-otc-collections-for-experiences-interview-to-be-held-on-july-18

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஓடிசி கலெக்சன் (OTC Collections) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை பெற விரும்புவோருக்கு ஓடிசி (OTC), கலெக்சன் (Collection), அக்கவுண்ட் ரிசிவபில் (Account Receiable for Cash Collection), டெப்ட் ரெக்கவரி (Debt Recovery) உள்ளிட்ட ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

இந்த பணியை பெற விரும்புவோர் ஏதாவது ஒருபிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் ஓடிசி கலெக்சன் (அக்கவுண்ட்ஸ் ரிசிவபிள்) பிரிவில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி குறைந்தபட்ம் 2 முதல் 4 ஆண்டு வரை OTC collection மற்றும் Accounts receivable பிரிவில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

இதுதவிர நைட்ஷிப்ட் பார்க்க தயாராக இருக்க வேண்டும். அதேபோல் பணி என்பது சுழற்சி அடிப்படையில் இருக்கும் என்பதால் அனைத்து ஷிப்ட்டுகளிலும் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும். வாரம் 5 நாட்கள் அலுவலகத்தில் தான் பணி இருக்கும். தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் நாளை (ஜூலை 18 ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Sholinganallur ELCOT campus, Tower 4, Chennai - 119 என்ற முகவரிக்குமுன்கூட்டியே செல்ல வேண்டும். Face to Face முறையில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டியிருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+