வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அழைக்கும் மதுரை HCL நிறுவனம்.. நல்ல சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைபிரிட் முறையில் பணி செய்யலாம். இதன்மூலம் அலுவலகம் செல்லாமல் வாரம் 2 நாட்கள் வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் எச்சிஎல்-லும் ஒன்று. இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப் பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது க்ளைவுட் இன்ஜினியர் (Cloud Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிரைமரி ஸ்கில் ஆக Azure ADF தெரிந்து வைத்திருக்க வேண்டும். செகண்டரி ஸ்கில்ஸ் ஆக Node.js, Python தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இதுதவிர கல்லூரி படிப்பு தொடர்பாக எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் மேற்கூறிய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் டெவலப்பர் டீமுக்கு டெக்னிக்கல் ரீதியாக Guidance செய்ய வேண்டும். பணியை பெறுவோர் Hybrid முறையில் வேலை செய்யலாம். இதன்மூலம் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்ய முடியும்.
பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கு மதுரையில் 2 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் லிங்க்ட்இன் பக்கத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரம் விண்ணப்பம் செய்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
பணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications