HCL -வேலைவாய்ப்பு.. அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டுமே போதும்.. மதுரையிலேயே பணி!
மதுரை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரை உள்பட 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல். இந்த நிறுவனம் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் எச்சிஎல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் எச்சிஎல் நிறுவனம் சார்பில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் கிராசூவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.
இந்த பணிக்கு டிகிரி முடித்திருந்தால் விண்ணப்பம் செய்யலாம். அதாவது மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பிசிஏ அல்லது பிஎஸ்சி டிகிரியை 2024ம் ஆண்டில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் என்பது தேவையில்லை. இருப்பினும்ஒரு கண்டிஷன் உள்ளது. இந்த டிகிரியை 60 சதவீத மதிப்பெண்களுடன் விண்ணப்பத்தார்கள் முடித்திருந்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த அறிவிப்பில் இன்னொரு முக்கிய விஷயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 12 மாத (அதாவது ஓராண்டு) அக்ரிமெண்ட்டில் பணியாற்ற வேண்டும். ஒருவேளை பணிக்கு தேர்வாகி முதல் 12 மாதத்துக்குள் வேலையை விட்டால் அவர்கள் எச்சிஎல் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழகத்தில் மதுரையில் பணியமர்த்தப்படுவர்கள். இதுதவிர மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவிலும் பணி நியமனம் செய்யப்படலாம். பணி என்பது Global Desk Service, Client facing role என்பதாக இருக்கும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பள விபரம் பின்னர் அறிவிக்கப்படும். திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். இதனால் முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications