HCL-யில் வேலைவாய்ப்பு.. ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம்! சென்னையிலேயே பணி.. நாளை இன்டர்வியூ
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல்-ல் சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு சென்னை, நொய்டாவில் நாளை இன்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல் டெக்னாலஜிஸ். எச்சிஎல் என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் சென்னை மற்றும் நொய்டாவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி தற்போது 2 வகையான பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாப்ட்வேர் இன்ஜினியர், சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2021 முதல் 2023ம் ஆண்டுக்குள் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் .NET, JAVA Full Stack, Java Guidewire, Automation Testing Selenium SAP உள்ளிட்டவற்றில் திறமை பெற்றிருக்க வேண்டும். அதோடு குறிப்பிட்ட பிரிவில் 6 முதல் 24 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னையில் பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது. இதற்கான இன்டர்வியூ என்பது நொய்டா மற்றும் சென்னையில் நாளை (ஜுன் 12ம் தேதி) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
நொய்டாவில் என்றால் ஏ/8/9 செக்டார் - 70, எச்சிஎல் டெக்னாலஜிஸ் நொய்டா என்ற இடத்திலும், சென்னை என்றால் எல்காட்- எஸ்இஇசட், டவர் 3, எச்சிஎல் டெக்னாலஜிஸ், கிரவுண்ட் ஃப்ளோர் (நியூ ரவுண்ட் கஃபே), சோழிங்கநல்லூர் 600119 என்ற முகவரியில் நேர்க்காணல் நடைபெறுவதாக அதிகார்பபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்க்காணல் செல்வோர் போட்டோவுடன் கூடிய ரெஸ்யூம், 10, 12, இளங்கலை, முதுகலை படிப்புக்கான ஒரிஜினல் மற்றும் நகல் மார்க்சிட்டை கையில் வைத்திருக்க வேண்டும். ஆதார்கள் கார்டு, பார்ன் கார்டு உள்ளிட்டவற்றின் ஹார்ட்காபியை கையில் எடுத்து செல்ல வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். நாளை நேர்க்காணல் நடைபெற உள்ளதால் உடனே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications