ரூ.6 லட்சம் வரை சம்பளம்.. 3 பிரிவுகளில் சென்னை HCL வேலைவாய்ப்பு.. ஜனவரி 11, 12 தேதிகளில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து 3 பிரிவுகளில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சென்னை நாவலூரில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்திலும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இயங்கி வருகிறது.

எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து தற்போது 3 பிரிவுகளில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சி++ டெவலப்பர் (C++ Developer), பைத்தான் டெவலப்பர் வித் எஸ்க்யூஎல் (Python Developer with SQL), Flutter பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10, பிளஸ்2 முடித்து ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை 2021,2022, 2023 ஆகிய ஆண்டுகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சம்பளமாக ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பளம் என்பது பணி அனுபவத்தை பொறுத்து தான் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 11 மற்றும் 12 (சனி, ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Hacher Rank Technical Test முறையில் Face To Face ஆக நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் காலையில் HCL TECH, Block 1, Sandhya Infocity/ETA Special Economic Zone, NO:33, Rajiv Gandhi Salai, Navalur 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இந்த முகவரிக்கான லேண்ட் மார்க் என்பது Next to AGS/Vivara Mall ஆகும். இண்டர்வியூ செல்வோர் பணி தேவையான Updates Resume, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்பட பிற ஆவணங்களுடன் செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பிற நிறுவனங்களில் பணியாற்றுவோராக இருந்தால் பணிக்கு 30 நாள் நோட்டீஸ் பிரியட் காலஅளவில் சேர தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications