HCL வேலைவாய்ப்பு.. இன்று முதல் 3 நாள் நடக்கும் இண்டர்வியூ.. சென்னையில் பணி நியமனம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் HCL ஐடி நிறுவனத்தில் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக எச்சிஎல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: எச்சிஎல் நிறுவனத்தில் Customer Service Representative பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது ஹெல்த்கேர் வாய்ஸ் இன் பவுண்ட் மற்றும் அவுட் பவுண்ட் (Healthcare Voice Inbound & Outbound) பணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பணியை விரும்புவோருக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Inbound & Outbound Calls, ஹெல்த்ஹேர் இன்டர்நேஷனல் வாய்ஸ் சப்போர்ட் தெரிந்திருக்க வேண்டும். ஆர் சி எம், டெனியல் மேனேஜ்மென்ட், பேயர் எக்ஸ்பிரியன்ஸ் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி என்பது இருக்கும். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் பயிற்சி வழங்கப்படும். எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட் ஷிப்ட்டில் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான இண்டர்வியூ என்பது மார்ச் 20 (இன்று) முதல் மார்ச் 22ம் தேதி வரை 3 நாட்கள் தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Sholinganallur ELCOT Campus, Tower 4, Chennai - 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு Face To Face முறையில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இண்டர்வியூவுக்கு செல்லும்போது லேப்டாப் என்பது அனுமதிக்கப்படாது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications