HCL IT Jobs: வாரம் 5 நாள் தான் வேலை... அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு செப்., 10ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Arts மற்றும் Science பிரிவில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்து செப்டம்பர் 10ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை எச்சிஎல் அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
எச்சிஎல் நிறுவனத்தில் Customer Service Representative பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் Arts & Science படிப்பில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்டெக், எம்சிஏ, பிஇ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணி இருக்கும். 5 நாட்களும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டியிருக்கும். அதேபோல் பணி US Shift முறையில் இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 10ம் தேி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இண்டர்வியூ நடைபெறும். Face to Face இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No.602/3/138, Special Economic Zone, Elcot- SeZ, Medavakkam High Road, Sholinganallur, Chennai 600119 என்ற முகவரிக்கு செப்டம்பர் 10ம் தேதி செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications