Work From Home.. அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்து வேலை.. HCL தரும் சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் சென்றும், வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம். டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். இது எந்த மாதிரியான பணி, விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Customer Service Representative பிரிவில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். குறிப்பாக அமெரிக்கா அடிப்படையில் பணியில் இருந்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
அலுவலகத்தின் Internal tools களை பயன்படுத்தி கஸ்டமர் பிரச்சனைகளை ரிவ்யூ செய்ய தெரி்நதிருக்க வேண்டும். அதேபோல் கஸ்டமர்களின் கேள்விகளுக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக தீர்க்க தெரிந்திருக்க வேண்டும். டாக்மென்ட் பிரச்சனைகள், கஸ்டமர் ரெக்கார்ட் அப்டேட் உள்ளிட்டவை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
புதிய விஷயங்களை உடனடியாக கற்றுக்கொள்ளும் திறன் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
ஏனென்றால் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பின் வழியாக விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் [email protected] என்ற முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்க வேண்டும்.
பணி என்பது நைட்ஷிப்ட் அடிப்படையில் இருக்கும். இருப்பினும் Hybrid/ Work From Home ஆப்ஷன்கள் இருக்கிறது. இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் இருந்தும் பணியாற்றலாம். அதேபோல் வீட்டில் இருந்தும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications