HCL வேலைவாய்ப்பு.. சென்னையில் நாளை அக்டோபர் 30ல் இண்டர்வியூ.. செம வாய்ப்பு.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது அக்டோபர் 30ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் டெக் (HCL Tech) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

it jobs job

இந்நிலையில் தான் எச்சிஎல் நிறுவனம் சார்பில் நாளை (அக்டோபர் 30) இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. அதற்கான விபரம் வருமாறு:

எச்சிஎல் சார்பில் தற்போது டேட்டா அனலிஸ்ட் (Data Analyst) பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை பிரிவில் பிசினஸ், பிசினஸ் இன்டெலிஜென்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அல்லது டேட்டா அனலிஸ்ட் (Excel Macro, Google Adwords, HTML) பணியில் 4 முதல் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் Excel/Google Sheets Functions for data analysis மற்றும் Manipulation உள்ளிட்டவற்றில் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல் MS powerpoint, word அல்லது Google Docs/slides உள்ளிட்டவற்றில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கான கடைசி கட்ட இண்டர்வியூவின்போது சம்பளம் குறித்த விபரம் வெளியாகும். இதுதவிர Tableau, Power BI, SQL Server உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.hcltech.com இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இருப்பினும் இண்டர்வியூ என்பது நாளை (அக்டோபர் 30) சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ South Phase, Ambattur Industrial Estate, 8, Madras Thiruvallur High Road, Ambattur, Chennai, Tamil Nadu 600058, என்ற முகவரியில் அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது.

பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+