HCL வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 19 வரை சென்னையில் இண்டர்வியூ.. சோழிங்கநல்லூரில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ பிப்ரவரி 17 ம் தேதி முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லறை மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளுக்கான சில முக்கிய சேவைகளையும் வழங்கி வருகிறது.

it jobs job jobs

தமிழகத்தை பொறுத்தவரை எச்சிஎல் நிறுவனம் என்பது சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது வெளியாகி உள்ள வேலைவாய்ப்பு குறித்த முக்கிய விபரங்களை இங்கு காணலாம்.


தற்போதைய அறிவிப்பின்படி Freshers - Healthcare Voice inbound & Outbound என்ற பெயரில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புவெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஇ, பிடெக் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். நைட்ஷிப்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இது Freshers-க்கான பணியாகும். இதனால் பணி அனுபவம் இல்லாமல் இருப்பவர்கள் கூட இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் பற்றிய முழுவிபரம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.

இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 17 ம் தேதி முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது face to face முறையில் இருக்கும். இதில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Sholinganallur ELCOT Campus Touwer 54, Chennai 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர்3 Resumes வைத்திருக்க வேண்டும். 3 பிரிவுகளில் இண்டர்வியூ என்பது இருக்கும். அதன்படி HR Screening, Versant Test, Operations Interview ஆகிய படிநிலைகளில் இண்டர்வியூ நடைபெறும். Versant Testக்கு ஹெட்போன் வைத்திருக்க வேண்டும். லேப்டாப் எடுத்து செல்ல அனுமதியில்லை.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூர் எல்காட்டில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு கட்டணத்துடன் கூடிய Cab வசதி ஏற்படுத்தி தரப்படும். இன்டர்நேஷனல் டிரெய்னர்களை வைத்து டிரெய்னிங் தரப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய click Here

https://www.linkedin.com/jobs/view/4151867716/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+